PIB Headquarters
இந்தியாவின் அரச பரம்பரை அருங்காட்சியகம் அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
Posted On:
31 OCT 2025 12:18PM by PIB Chennai
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் ஒற்றுமை சிலை அருகே இம்மாதம் 31-ம் தேதி அன்று இந்திய அரச பரம்பரை அருங்காட்சியகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
காலத்தைக் கடந்து நிற்கும் ஒருமைப்பாடு மற்றும் தியாக உணர்வு குறித்து எதிர்கால தலைமுறையினர் உத்வேகம் பெறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
367 கோடி ரூபாய் செலவில் நான்கு விதமான அரங்குகளுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ஏக்தா நகரில் ஒற்றுமைச் சிலை அருகே உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
தேசிய ஒற்றுமை தின நிகழ்சியின் ஒரு பகுதியாக நமது நாட்டில் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய அரச பாரம்பரிய அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் அரசுகளின் சின்னங்கள், கலையம்சம் பொருந்திய பொருட்கள், அரச பாரம்பரிய உடைகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் மற்றும் தொன்மையான பொருட்கள் போன்ற அரச பாரம்பரியத்தை நினைவு கூரும் அம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.
பல்வேறு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே தேசமாக சுதந்திர இந்தியாவை உருவாக்கி சாதனைப் படைக்கப்பட்டுள்ளதை நினைவு கூரும் வகையிலும், வேற்றுமை, ஒற்றுமை என்பதற்கான அடையாளச் சின்னமாகவும் நாட்டின் வெற்றியைக் குறிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள அரச பரம்பரைகளின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடைமுறைகளைக் கொண்டாடும் வகையிலும் கலாச்சாரம் மற்றும் அரசியல் அடையாளங்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184494
***
SS/SV/KPG/SH
(Release ID: 2184838)
Visitor Counter : 10