நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 30 OCT 2025 2:09PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கி, அக்டோபர் 30 முதல் நவம்பர் 2, 2025 வரை பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சாங்சென் சோகோர் மடாலயத்திற்கு மத்திய நிதியமைச்சர் வருகை தருவார். 1765 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மடாலயத்தில் புத்த மதம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட துறவிகள் வசிக்கின்றனர்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருமதி சீதாராமன் இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பல முக்கிய திட்டங்களைப் பார்வையிடுவார். இதில் குறிச்சு நீர்மின் நிலைய அணை மற்றும் மின் உற்பத்தி நிலையம், கியால்சங் அகாடமி, சாங்சென் சோகோர் மடாலயம் மற்றும் புனாகா ட்சோங் ஆகியவை அடங்கும்.

மத்திய நிதியமைச்சர், பூட்டான் மன்னர் மேதகு திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூட்டான் பிரதமர் மேதகு திரு டாஷோ ஷெரிங் டோப்கே ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்திய-பூட்டான் பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க பூட்டான் நிதியமைச்சர் திரு. லேக்கி டோர்ஜியுடன் இருதரப்பு சந்திப்பையும் அமைச்சர் நடத்துவார்.

 

 

குடிசை மற்றும் சிறு தொழில்கள் சந்தையையும் மத்திய நிதியமைச்சர் பார்வையிடுவார். அங்கு அவர் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐI) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையைக் காண்பார், இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் நிதி இணைப்பை பிரதிபலிக்கிறது.

தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதியில், திருமதி சீதாராமன் பூட்டானின் இரண்டாவது பழமையான மற்றும் இரண்டாவது பெரிய மடாலயமான  புனாக்கா சோங்கை பார்வையிடுவார். புனாக்கா சோங்கிற்குச் செல்லும் வழியில், திருமதி சீதாராமன் பூட்டான் விவசாயிகளுடன் காலந்துரையாடுவார். அவர்களின் வேளாண் நடைமுறைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி அமைச்சர் கேட்டறிவார்.

பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் பிராந்தியத்தில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பில் வேரூன்றிய பூட்டானுடனான இந்தியாவின் நீடித்த கூட்டாண்மையை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:      https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184106

***

AD/BR/KR


(रिलीज़ आईडी: 2184685) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Marathi , Punjabi , Gujarati , Malayalam