எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேபாள எரிசக்தித்துறை அமைச்சர் திரு குல்மன் ஹிசிங், மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லாலை சந்தித்தார்

Posted On: 29 OCT 2025 12:37PM by PIB Chennai

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லாலை நேபாள நாட்டின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் பாசனத்துறை அமைச்சர்  திரு குல்மன் ஹிசிங் புதுதில்லியில் இன்று சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கிடையே மின்துறையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

நேபாளத்தில் நீர் மின் திட்டங்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா-நேபாளம் இடையே தூய்மை எரிசக்தி வளங்களை ஒருங்கிணைத்தலை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல், எல்லைப்பகுதி மின் வர்த்தகத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பிராந்திய கட்டமைப்பு இணைப்பு முன் முயற்சிகள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.

திரு மனோகர் லால் மற்றும் திரு குல்மான் ஹிசிங் ஆகியோரின் முன்னிலையில், இந்தியாவின் மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் மற்றும் நேபாள மின்சார ஆணையம் இடையே கூட்டு முயற்சி மற்றும் பங்குதாரர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவை அதிக திறன் கொண்ட எல்லைப்பகுதி மின் பரிமாற்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலும், நேபாளத்திலும் தலா ஒரு கூட்டு முயற்சி நிறுவனங்களை இணைப்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகும்.

முன்மொழியப்பட்ட எல்லைப்பகுதி மின் பரிமாற்ற அமைப்பு திட்டங்கள் இனருவா (நேபாளம்) - நியூ பூர்னியா (இந்தியா) 400 கிலோவாட் இரட்டை சர்கியூட் (குவாட் மூஸ்) மின் பரிமாற்ற இணைப்பு மற்றும் லம்கி (டோடோதரா) (நேபாளம்) - பரேலி (இந்தியா) 400 கிலோவாட் இரட்டை சர்கியூட் (குவாட் மூஸ்) மின் பரிமாற்ற இணைப்பு ஆகியவை அடங்கும். இந்த மின் பரிமாற்ற வழித்தடங்கள் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான மின்சார பரிமாற்றத்தை கணிசமாக மேம்படுத்தும். பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளிலும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183654  

***

SS/IR/AG/SH


(Release ID: 2183918) Visitor Counter : 4