தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சேவைகளில் இடையூறின்றி சிம்கார்டுகளின் உரிமத்தை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது
प्रविष्टि तिथि:
29 OCT 2025 11:51AM by PIB Chennai
மொபைல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சிம்கார்டுகளுக்கான உரிமங்களை மாற்றிக் கொள்வதற்கான கட்டமைப்புகள் குறித்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான நடைமுறைகள் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சேவைகளில் எவ்வித இடையூறுமின்றி சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
மொபைல் சேவைகளின் தொடர்புகள் துண்டிக்கப்படாமல் பெறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளுக்கு இந்த விதிமுறைகள் வழிவகுக்கும்.
மொபைல் சேவைகளின் பயனாளர் அல்லது 3-வது நபர் சிம்கார்டு பெயர் மாற்றம் கோரி சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மூலம் மாற்றம் செய்து கொள்வது.
ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள நபரிடமிருந்து ஆட்சேபம் ஏதும் இல்லை என்ற சான்றிதழ் பெற்று, சிம்கார்டு பெயரை மாற்றிக் கொள்வதற்கான விண்ணப்பம் செய்யும் நடைமுறை. இதன்படி வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்திற்கு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வழங்கவும் வகை செய்கிறது.
வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் சிம்கார்டுகளுக்கான பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதி. இதன்படி, சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கேஒய்சி மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் உட்பட அனைத்துவிதமான பொறுப்புகள், கடமைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி அளிப்பதன் மூலம் சிம்கார்டின் பெயரை மாற்றிக் கொள்வது.
வாடிக்கையாளர்களின் தரவுகளை சரிபார்த்து கேஒய்சி நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு சேவை வழங்கும் நிறுவனத்தில் தரவுகளை புதுப்பிப்பதன் மூலம் பெயர் மாற்றம் செய்து கொள்வது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183636
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2183914)
आगंतुक पटल : 17