உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாகாலாந்திற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.20 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சர் திரு அமித் ஷா ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 OCT 2025 4:24PM by PIB Chennai

2025-26-ம் ஆண்டில் நாகாலாந்திற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் மத்திய அரசின் பங்களிப்பாக 2-வது தவணையான ரூ.20 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். நடப்பாண்டில் தென்மேற்கு மழைக்காலத்தின் போது பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கும் மற்றும் நிலச்சரிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு அரசு விரைந்து நிவாரண உதவியை வழங்கும் வகையில் இத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலின் பேரில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தோளோடு தோளாக உறுதுணையாக இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

2025-26-ம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 27 மாநிலங்களுக்கு ரூ.15,554 கோடியை மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. அத்துடன் மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், ரூ.4,571.30 கோடியை 21 மாநிலங்களுக்கும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், ரூ.372.09 கோடியை 9 மாநிலங்களுக்கும் விடுவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183346

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2183465) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada