வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்தியத்தில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆர்வம்

प्रविष्टि तिथि: 28 OCT 2025 4:31PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு ஜோதிராதித்ய  சிந்தியா, வடகிழக்கு பிராந்தியம் தொடர்பான  மூன்று உயர் மட்ட பணிக்குழுக்  கூட்டங்களில் அக்டோபர் 27-ம் தேதி பங்கேற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் எட்டு உயர் மட்ட பணிக்குழுக்களை அமைத்தது, ஒவ்வொன்றும் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சர்களில் ஒருவரின் தலைமையில், மத்திய அமைச்சர் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் மூன்று முதலமைச்சர்கள் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 2024 டிசம்பர் 21 அன்று அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது முழுமையான அமர்வின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்திலிருந்து இந்த முயற்சி உருவானது. இந்தப் பணிக்குழுக்கள் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்த்து, கொள்கை சீரமைப்பை செயல்படுத்தி, வளர்ச்சி முயற்சிகள் மாநிலங்களுக்கு இடையேயானதை விட பிராந்திய ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்கின்றன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183353

***

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2183446) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , हिन्दी , Nepali , Bengali-TR , Assamese