நிலக்கரி அமைச்சகம்
மத்திய நிலக்கரி அமைச்சகம் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் 14-வது சுற்றை தொடங்கவுள்ளது
प्रविष्टि तिथि:
28 OCT 2025 11:57AM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகம் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் 14-வது சுற்றை 2025 அக்டோபர் 29 அன்று புதுதில்லியில் தொடங்குவதற்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.
இந்திய நிலக்கரித் துறையில் வெளிப்படைத்தன்மை, போட்டித்தன்மை, தற்சார்பை மேம்படுத்துவதில் இந்த ஏலம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் 2020-ல் தொடங்கப்பட்ட வணிக நிலக்கரி சுரங்க ஏலச் செயல்முறை, நிறுவப்பட்ட மற்றும் புதிய தொழில்துறையினரின் வலுவான பங்களிப்பை தொடர்ந்து கண்டுள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை விரைவுபடுத்துவதிலும், நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதிலும் இது முக்கியப் பங்கு வகித்துள்ளது.
வரவிருக்கும் 14-வது சுற்று இந்த முற்போக்கான பயணத்தைத் தொடர்கிறது. வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பரந்த தொழில்துறை பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் மிகவும் தாராளமான விதிமுறைகளை நிலக்கரி சுரங்கங்களுக்கு இது வழங்குகிறது. இதன் மூலம் இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து, தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை ஆதரித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தும் வகையில், நிலக்கரி அமைச்சகம் இந்த நிகழ்வின் போது நிலக்கரிக்கான நிலத்தை கையகப்படுத்துதல், மேலாண்மை மற்றும் அதற்கான கட்டணத்தை செலுத்துதல் (கிளாம்ப்), கோய்லா சக்தி ஆகிய இரண்டு டிஜிட்டல் தளங்களையும் தொடங்குகிறது.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறும்போது, சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், நிலையான மற்றும் பொறுப்பான நிலக்கரிச் சுரங்கச் சூழலை வளர்ப்பதற்கும் அமைச்சகம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183223
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2183383)
आगंतुक पटल : 17