விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண்துறையில் தரமான கல்வியை வழங்குவது நாட்டிற்கு மிகவும் அவசியம் : மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்
प्रविष्टि तिथि:
27 OCT 2025 4:02PM by PIB Chennai
புதுதில்லி புசாவில் நடைபெற்ற தேசிய வேளாண் மாணவர்கள் மாநாட்டில் மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று பங்கேற்றார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வேளாண் மாணவர்கள் கலந்துகொண்டனர். வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களின் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பாகிரத் சௌத்ரி காணொலி காட்சி வாயிலாக இதில் கலந்துகொண்டார்.
வேளாண் துறையில் புதுமை கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதையும், அறிவுசார் பரிமாற்றத்தையும் நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. மாணவர்களுடனான உரையாடல் மூலம் ஆராய்ச்சி முன் முயற்சிகளை வலுப்படுத்துவது, திறமைமிக்க இளையோருக்கு உத்வேகம் அளிப்பது, வேளாண் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இது நோக்கமாக கொண்டதாகும்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சிவ்ராஜ் சிங் சௌகான், வேளாண் கல்வி நிறுவனங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது குறித்து கவலை தெரிவித்தார். தரமான கல்வியை உறுதிசெய்வதற்கு இக்காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும இயக்குநரை அறிவுறுத்தினார். சம்மந்தப்பட்ட மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை விரைவுபடுத்த தாம் அம்மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதவிருப்பதாக குறிப்பிட்டார். எதிர்காலத்தில் வேளாண் மாணவர்களின் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள கூடாது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை குறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சர், நாட்டில் உயர்தர வேளாண் கல்வியை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182928
***
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2183022)
आगंतुक पटल : 19