குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளம் காவல்துறை அதிகாரிகள் முக்கியப் பங்காற்ற முடியும் : திருமதி திரௌபதி முர்மு

Posted On: 27 OCT 2025 2:24PM by PIB Chennai

நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பெருமளவிலான பொதுத்துறை மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.  குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த காவல் துறை அதிகாரிகளிடையே இன்று அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலக அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக இந்தியா விளங்குகிறது என்று கூறினார். எந்தவொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குவதில் சட்டம் ஒழுங்கு அவசியம் என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் திறமையான காவல் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளம் அதிகாரிகள் தலைமையிலான எதிர்காலத்திற்கு தயாரான காவல்படை, முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இளம் அதிகாரிகள், அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதுடன் நிர்வாகத் திறன் கொண்டவராகவும் இருக்கிறார்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற நிர்வாகத் திறன் கொண்ட அதிகாரிகள், தங்களது பொறுப்புணர்வைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காவல் துறை அதிகாரிகள், நேர்மையான செயல்களைத் தேர்வு செய்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவசரமான சூழலில் நேர்மையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182870

***

SS/SV/KPG/KR


(Release ID: 2182974) Visitor Counter : 9