சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கண்காணிப்பு நடைமுறைகளை நிறுவனங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியம் – மத்திய அமைச்சர் ஜெ பி நட்டா
Posted On:
27 OCT 2025 1:36PM by PIB Chennai
நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் கண்காணிப்பு கலாச்சாரத்தை கட்டமைப்பதுடன் நேர்மையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் சுகாதார அமைச்சகத்தின் பணியாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து திரு ஜெ பி நட்டா தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழக்கமான பணிகள் குறித்தும், செய்யக் கூடாத அம்சங்கள் குறித்தும் எளிய மொழியில், சாமானிய பணியாளர் புரிந்து கொள்ளும் வகையில், சரிபார்ப்பு பட்டியலை தயாரிப்பதன் மூலம் நம்பிக்கை அல்லது கருணை அடிப்படையில் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உதவ முடியும் என்று கூறினார்.
கண்காணிப்பு நடைமுறைகள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் அது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட முடியும் என்றார். நாடு முழுவதும் இம்மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 2-ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182843
***
SS/SV/KPG/KR
(Release ID: 2182960)
Visitor Counter : 13