உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேர்மறையான பணியிடச் சூழலை உருவாக்குவதில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

Posted On: 25 OCT 2025 12:06PM by PIB Chennai

அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2025 வரை நடைபெற்று வரும் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 5.0 -ன் கீழ், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றங்கள்:

  • பொதுமக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளுக்கான இலக்குகளில் 87 சதவீதம்bஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
  • மொத்தம் 4,988 கோப்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.
  • 480 தூய்மை இயக்கங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 405 தூய்மை இயக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
  • குப்பைகள், மின் கழிவுகள் மற்றும் தேவையற்ற கோப்புகளை அகற்றுவதன் மூலம், 31,353 சதுர அடி பரப்பிலான அலுவலக இடங்கள் தூய்மையாக்கப்பட்டுள்ளன.
  • பழைய பொருட்களை விற்பனை செய்ததன் வாயிலாக 81,66,756 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு தலைமையில், தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் 09.10.2025 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அந்த அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், 13.10.2025 அன்று, அமைச்சக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அந்த வளாகத்தில் உள்ள உணவகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், நூலக செயல்பாடுகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். அமைச்சகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் தங்களது செயல்கள், நடத்தை மற்றும் சிந்தனைகளில் தூய்மை பராமரிப்பை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையின் கீழ், அதன் செயல்பாடுகளில் நேரடி, டிஜிட்டல் மற்றும் மன ரீதியாக நேர்மறையான, குழப்பம் இல்லாத பணியிட சூழலை மேம்படுத்துவதில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து உத்வேகம் பெற்று, தூய்மைப் பணிகளை  வாழ்க்கையின் ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு ராம் மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182387

***

AD/SV/RJ


(Release ID: 2182448) Visitor Counter : 8