வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், லக்சம்பர்க்கின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருமான திரு சேவியர் பெட்டல் மற்றும் ஜெர்மன் தொழிலதிபர்களைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 24 OCT 2025 12:49PM by PIB Chennai

ஜெர்மன் பயணத்தின் தொடர்ச்சியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், லக்சம்பர்க்கின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருமான திரு சேவியர் பெட்டலைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்து, இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வழிகளை ஆராய்ந்தனர். இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

முன்னணி ஜெர்மன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் திரு கோயல் நேரில் கலந்துரையாடினார். அவர் இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஏஜியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோச்சென் ஹேன்பெக், ஷேஃப்லர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ரோசன்ஃபெல்ட், ரெங்க் வாகன மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் மசூர், ஹெரெங்க்னெக்ட் ஏஜியின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் ஹெரெங்க்னெக்ட், எனர்ட்ராக் வாரிய உறுப்பினர் டோபியாஸ் பிஷோஃப்-நீம்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஓலா கேலெனியஸ் ஆகியோரைச் சந்தித்தார்.

இந்தியா மற்றும் ஜெர்மன் நிறுவனங்களுக்கிடையில், குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இயக்கம் போன்ற முக்கியமான துறைகளில், ஒருங்கிணைப்பு  மற்றும் அதிகரித்த ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சந்திப்பின் போது  கவனம் செலுத்தப்பட்டது.  இந்தியாவில் வணிகம் செய்வது குறித்த தங்கள் நம்பிக்கையான கண்ணோட்டத்தையும், அவர்களின் பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தையும் வணிகத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

இன்று மாலை, பெர்லின் உலகளாவிய உரையாடலில்  உலகளாவிய வர்த்தகம் குறித்த உயர்மட்டக் குழுவில் திரு கோயல் இணைவார். மேலும் ஜெர்மன் வணிகங்கள் மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடன் தமது சந்திப்புகளைத் தொடர்வார்.

***

(Release ID: 2182058)  

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2182197) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam