PIB Headquarters
azadi ka amrit mahotsav

வானம் தொட்ட வளர்ச்சி, வளம் சேர்க்கும் பொருளாதாரம்: இந்தியாவின் விமானத் துறையின் தொலைநோக்குப் பார்வை 2047"

Posted On: 23 OCT 2025 5:07PM by PIB Chennai

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக உருவெடுத்துள்ளது. விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ல் 74-ல் இருந்து 2025-ல் 163-ஆக உயர்ந்துள்ளது. 2047-க்குள் 350-400 விமான நிலையங்களாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சிவில் விமான அமைப்பின்  படி, விமானத் துறையில் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் மூன்று மடங்கு பொருளாதார செயல்பாட்டை உருவாக்குகிறது, ஆறு மடங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

தற்போது 77 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும், 3.69 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் உள்ளன. 116 இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உலகளாவிய இணைப்பை வலுப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10%-12% வளர்ச்சி அடைந்துள்ளது. 2040-க்குள் பயணிகளின் எண்ணிக்கை ஆறு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181865

(வெளியீட்டு அடையாள எண்:  2181865)

***

SS/VK/SH


(Release ID: 2181987) Visitor Counter : 4