தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான தயார் நிலை குறித்த தேர்தல் ஆணையத்தின் 2 நாள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது

Posted On: 23 OCT 2025 4:59PM by PIB Chennai

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவடைந்தது.

புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார் நிலையை இறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தபின் தலைமை தேர்தல் அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களை தெளிவுபடுத்தினர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த முறை மேற்க்கொள்ளப்பட்ட வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தங்களுடன் தற்போதைய வாக்காளர்களை இணைப்பது குறித்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்துள்ள அறிவுறுத்தல்களின் நிலை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் நேரடியாக கலந்துரையாடினர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த முறை மேற்க்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற தேதி, வாக்காளர் பட்டியல், வாக்காளர் எண்ணிக்கை குறித்த விரிவான தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ளதை அடுத்து நடைபெறும் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

***

(Release ID: 2181856)

SS/SV/AS/SH


(Release ID: 2181963) Visitor Counter : 11