புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கான இலச்சினையை வடிவமைக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

Posted On: 23 OCT 2025 3:09PM by PIB Chennai

பசுமை ஹைட்ரஜன்  சூழலை உருவாக்குவதற்காக விரிவான நடவடிக்கைத் திட்டத்தை அளிப்பதை  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள  தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்பன்  வெளியேற்றம்  இல்லாத  நிறுவன பொருளாதாரம், படிம எரிபொருள் இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைத்தல், தொழில்நுட்பத்தை  இந்தியா  ஏற்றுக் கொள்ளுதல், பசுமை ஹைட்ரஜனின் சந்தை வாய்ப்பு தலைமைத்துவம் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்காக இலச்சினை வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் சார்புகளை ஏற்றுமதி செய்தல், பயன்பாடு, உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  பங்கேற்பாளர்கள் ஜேபிஇஜி அல்லது பிஎன்ஜி அல்லது பிடிஎஃப் வடிவில் மட்டுமே இலச்சினையை பதிவேற்றம் செய்ய முடியும். தேர்ந்தெடுக்கப்படும்  இலச்சினையை வடிவமைத்தவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறும் பத்து பேருக்கு தலா ரூ.5,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும்.  விண்ணப்பங்களை https://www.mygov.in/task/logo-design-contest-national-green-hydrogen-mission/ என்ற இணையதளத்தில் 5.11.2025-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181793   

***

SS/IR/KPG/SH


(Release ID: 2181946) Visitor Counter : 6