சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
20,000 கி.மீ-க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்ய பரிசோதனை வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பயன்படுத்தவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2025 5:31PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், 23 மாநிலங்களில் 20,933 கி.மீ. பரப்பளவில் சாலைப் பட்டியல் மற்றும் நடைபாதை நிலை தரவுகளை சேகரித்தல், செயலாக்குதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆய்வு வாகனங்களை பயன்படுத்தவுள்ளது.
இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், சாலைகளின் மேற்பரப்பு விரிசல்கள், குழிகள் மற்றும் சீரற்ற பகுதிகள் போன்ற அனைத்து தொடர்புடைய சாலைக் குறைபாடுகள் குறித்த தேவையான தரவுகளை ஆணையம் சேகரிக்கும். இந்த கணக்கெடுப்புகள் மூலம் சேகரிக்கப்படும் தரவு, சாலை நிலைமைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உதவும்.
இந்த கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படும் தரவு, ஆணையத்தின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தில் பதிவேற்றப்படும். பின்னர், ஆணையத்தில் உள்ள பிரத்யேக நிபுணர் குழுவால் பகுப்பாய்வு செய்யப்படும். இறுதியாக, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வழக்கமான இடைவெளியில் சேகரிக்கப்படும் தரவு, எதிர்கால தொழில்நுட்ப நோக்கங்களுக்காக சாலை சொத்து மேலாண்மை அமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களில் பாதுகாக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181572
(வெளியீட்டு அடையாள எண்: 2181572)
***
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2181685)
வருகையாளர் எண்ணிக்கை : 26