வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டாண்மையை வலுப்படுத்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஜெர்மனி பயணம்
Posted On:
22 OCT 2025 4:25PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2025 அக்டோபர் 23 அன்று ஜெர்மனியிலுள்ள பெர்லினுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். ஜெர்மனியுடனான இந்தியாவின் வர்த்தக ஈடுபாட்டை மேம்படுத்துவதில் இந்தப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். 2025-ம் ஆண்டு இந்தியா-ஜெர்மனி கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்பதால் இது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இருதரப்பு உறவுகளின் நீண்டகால வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
இரு நாடுகளிலும் உள்ள மூத்த அரசு அதிகாரிகள், தொழில் தலைவர்கள் மற்றும் வணிக சங்கங்களுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் அமைச்சர் கோயலின் சந்திப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, மத்திய அமைச்சர், பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்திக்கான ஜெர்மன் அமைச்சர் திருமதி கேத்தரினா ரீச், ஜெர்மனியின் ஜி7 & ஜி20 ஷெர்பாவின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை ஆலோசகர் டாக்டர் லெவின் ஹோல் ஆகியோருடன் உயர் மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். இந்த சந்திப்பின் போது, இந்தோ-ஜெர்மன் பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மேம்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து விவாதங்கள் நடைபெறும்.
பெர்லின் பயணத்தின் ஒரு பகுதியாக, திரு கோயல் மூன்றாவது பெர்லின் உலகளாவிய உரையாடலில் ஒரு பேச்சாளராகப் பங்கேற்பார். இது வணிகம், அரசு மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கும் வருடாந்திர உச்சிமாநாடு ஆகும்.
இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக, முன்னணி ஜெர்மன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான நேரடி சந்திப்புகள் இடம்பெறும். இந்தப் பயணம் இந்தியாவிற்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளர்களுக்கும் இடையிலான முன்னுரிமைகளின் வலுவான சீரமைப்பைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181519
***
SS/PKV/SH
(Release ID: 2181642)
Visitor Counter : 8