தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

கேரளா, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் மூன்று பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது

Posted On: 22 OCT 2025 3:37PM by PIB Chennai

கேரளா மற்றும் மணிப்பூரில் ஆகஸ்ட் 30, 2025 அன்றும், திரிபுராவில் செப்டம்பர் 21, 2025 அன்றும் மூன்று பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில்,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மூன்று வழக்குகளிலும், மூன்று மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரங்கள் குறித்து விரிவான அறிக்கைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்கு திரிபுராவின் ஹெசமாரா பகுதியில் ஒரு அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த துணி விநியோக நிகழ்ச்சியில் ஒரு  பத்திரிகையாளர், குச்சிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் சேனாபதி மாவட்டத்தின் லைய் கிராமத்தில் மலர் விழாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார். ஏர் கன் மூலம் இரண்டு முறை சுடப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கேரளாவில், தொடுபுழா அருகே மங்காட்டுகவாலாவில் பத்திரிகையாளர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அவர் ஒரு திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.

மூன்று வழக்குகளிலும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

***

(Release ID: 2181499)

SS/PKV/SH


(Release ID: 2181636) Visitor Counter : 5