பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாட்டின் 2-வது பகுதி 2025 அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது

Posted On: 21 OCT 2025 4:44PM by PIB Chennai

இந்திய கடற்படையின் ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் கமாண்டர்களின் மாநாடு 2025-ன் 2-வது பகுதி புதுதில்லியில் 2025 அக்டோபர் 22 தொடங்கி 24-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் கடற்படையின் உயர் செயல்பாடு, தயார் நிலை ஆகியவற்றின் பின்னணியில் இம்மாநாடு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இம்மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளர் உரையாற்ற உள்ளனர்.  வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையையொட்டி தேசிய நலன்கள் குறித்த கருத்துக்களை கடற்படை கமாண்டர்களிடம் அவர்கள் எடுத்துரைக்க உள்ளனர். ராணுவத் தலைமை தளபதி, விமானப்படைத் தலைமை தளபதி ஆகியோரும் இம்மாநாட்டில் உரையாற்ற உள்ளனர். அத்துடன் கடற்படை உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளனர்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்புச் சூழலுக்கான திட்டங்கள் குறித்து கடற்படை தளபதிகளுடன் கடற்படை தலைமை தளபதி விவாதிக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181267

***

SS/IR/KPG/SG

 


(Release ID: 2181306) Visitor Counter : 12