குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை செயலகங்களில் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டார்
Posted On:
21 OCT 2025 4:27PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (21.10.2025) நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை செயலகங்களின் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டார். கேள்வி பிரிவு, உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகளின் பிரிவு, உறுப்பினர்களுக்கான வசதிகளின் பிரிவு, அறிவிக்கை அலுவலகம், செய்தியாளர்கள் பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.
செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் அவர் உரையாடி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாநிலங்களவை சுமூகமாகவும் திறம்படவும் செயல்படுவதை உறுதி செய்வதில் அவர்களது பங்களிப்பை பாராட்டினார். தங்களது பணிகளை அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிபுணத்துடன் தொடர்ந்து பணிகளில் நாடாளுமன்ற பணிகளை வலுப்படுத்துமாறும் நாட்டின் சேவையில் உறுதி கொள்ளுமாறும் திரு சி பி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
***
(Release ID: 2181259)
SS/IR/KPG/SG
(Release ID: 2181303)
Visitor Counter : 12