குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மங்கோலியா இடையேயான ஒத்துழைப்பு இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் : குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

प्रविष्टि तिथि: 14 OCT 2025 10:30PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மங்கோலிய அதிபர் திரு குரேல்சுக் உக்னாவிற்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (14.10.2025) சிறப்பான வரவேற்பு அளித்தார். அவரை உபசரிக்கும் வகையில் குடியரசுத்தலைவர் விருந்தளித்தார்.

குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ள மங்கோலிய அதிபர் திரு குரேல்சுக் மற்றும் அவருடன் வந்திருந்த  பிரதிநிதிகளுக்கு குடியரசுத்தலைவர் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக மாண்புகள் இந்திய – மங்கோலியா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மங்கோலியா இந்தியாவில் உத்திசார் நட்பு நாடாகவும், 3-வது மற்றும் ஆன்மீகத் தன்மை கொண்ட அண்டை நாடாகவும் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இந்த விஜயம் உள்ளதென்று அவர் கூறினார்.

இந்தியா – மங்கோலியா இடையேயான ஒத்துழைப்பு இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179189  

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2181178) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu