தேர்தல் ஆணையம்
பீகாரில் தேர்தல் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
Posted On:
19 OCT 2025 3:25PM by PIB Chennai
பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல், 2025 மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் ஆணையத்திற்கு உதவ, அரசியலமைப்பின் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 20B ஆகியவற்றால் வழங்கப்பட்ட முழுமையான அதிகாரங்களின் கீழ், தேர்தல் ஆணையம் மத்திய பார்வையாளர்களை நியமித்துள்ளது.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்துக்கு 121 பொது பார்வையாளர்கள் மற்றும் 18 போலீஸ் பார்வையாளர்களையும், 2 -ம் கட்டத்திற்கு 20 போலீஸ் பார்வையாளர்களுடன் 122 பொது பார்வையாளர்களையும் ஆணையம் ஏற்கனவே நியமித்துள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் 8 பொது மற்றும் 8 போலீஸ் பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து பார்வையாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான முதல் சுற்று பயணத்தை ஏற்கனவே முடித்துவிட்டனர், இப்போது அவர்கள் அந்தந்தத் தொகுதிகளில் மீண்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் செயல்முறை முழுவதையும் உன்னிப்பாகக் கண்காணித்து, வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்யுமாறு பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் முழுமையாக அணுகக்கூடியவர்களாக இருக்கவும், அவர்களின் குறைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்யவும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடவும், வாக்காளர்களின் வசதிக்காக ஆணையத்தால் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகளை செயல்படுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AD/PKV/SH
(Release ID: 2180875)
Visitor Counter : 7