பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சி.ஜி. முரளிதரன் பதவியேற்றார்

Posted On: 18 OCT 2025 6:46PM by PIB Chennai

தேசத்திற்கு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவையை வழங்கிய பின்னர் செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சாதனா எஸ். நாயர் ஓய்வுபெற்றதை அடுத்து மருத்துவ சேவைகள் (ராணுவம்) தலைமை இயக்குநராக  லெப்டினன்ட் ஜெனரல் சி.ஜி. முரளிதரன் பொறுப்பேற்றுள்ளார்.

புனேவில் உள்ள மதிப்புமிக்க ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின்  முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் முரளிதரன் 1987-ல் ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு மற்றும் மேற்கு பிராந்திய படைப்பிரிவுகளின்  பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு சூழல்களில் வளமான செயல்பாட்டு மற்றும் நிர்வாக அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

ராணுவ மருத்துவ சேவைகளின் தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் முரளிதரன், சேவையில் உள்ள பணியாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முழுமையான மருத்துவ சேவையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நவீன போரின் மாறிவரும் தன்மை ஆகியவற்றின் பின்னணியில்மருத்துவ தயார்நிலையை வலுப்படுத்துவது அவரது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

அவரது தலைமையின் கீழ், ராணுவ மருத்துவப் படை, ஆயுதப்படை சமூகத்திற்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் அதன் உறுதியான அர்ப்பணிப்பைத் தொடரும், அதன் உன்னதமான குறிக்கோளான - அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும்.

******

(Release ID: 2180769)

AD/PKV/SG

 

 

 


(Release ID: 2180792) Visitor Counter : 21