வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்குகின்றன: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா
प्रविष्टि तिथि:
17 OCT 2025 3:27PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்குகின்றன என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா தெரிவித்துள்ளார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், அஞ்சல்துறை, தொலைத் தொடர்பு துறை ஆகியவற்றின் ஓராண்டு (ஆகஸ்ட் 2024 - செப்டம்பர் 2025) சாதனைகள் குறித்து இன்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் விவரித்தார். இந்த சந்திப்பின் போது தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, கல்வி மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜூம்தார், வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு சஞ்சல் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் வடகிழக்கு பிராந்தியம் இன்று புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிப்பதாக திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இது தற்போது அதிகாரம் பெற்றிருப்பதுடன் போக்குவரத்து தொடர்பை கொண்டு எதிர்காலத்திற்கு தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். பிரதமரின் வழிகாட்டுதல்கள் காரணமாக எல்லைப்புற மாநிலங்களாக இருந்த இவை தற்போது முன்னணி மாநிலங்களாக இருப்பதோடு நம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையின் அடையாளங்களாக விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சிக்கிம், அருணாச்சலப்பிரதேசங்களில் விமான நிலையங்கள் இல்லை என்றும் 8 வடகிழக்கு மாநிலங்களிலும் மொத்தம் 9 விமான நிலையங்களே இருந்தன என்றும் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது அருணாலப்பிரதேசத்தில் மட்டும் 4 விமான நிலையங்கள் என்பதுடன் மொத்தம் 17 விமான நிலையங்கள் என எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தெரிவித்தார். ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை 2029-ம் ஆண்டுக்குள் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ரயில் போக்குவரத்தால் இணைக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180315
***
SS/SMB/AG/SH
(रिलीज़ आईडी: 2180542)
आगंतुक पटल : 15