கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையத்தின் ஹால்டியா பலவகை பயன்பாட்டு முனையம் அரசு, தனியார் கூட்டாண்மைக்காக ஐஆர்சி நேச்சுரல் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
Posted On:
17 OCT 2025 12:09PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையத்தின் ஹால்டியா பலவகை பயன்பாட்டு முனையம் ஐஆர்சி நேச்சுரல் ரிசோர்சஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை விரிவுபடுத்துதல், அரசு, தனியார் கூட்டாண்மை மூலம் பல்வகை சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசின் உந்துதலை குறிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலக வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையத்தால் கட்டப்பட்ட ஹால்டியா பலவகை பயன்பாட்டு முனையம் ஆண்டுக்கு 3.08 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும். இந்த முனையத்தின் திறனையும், நீடித்த செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையம் அரசு – தனியார் கூட்டாண்மை மாதிரியை தயார்படுத்துதல், செயல்படுத்துதல், மாற்றியளித்தல் என்ற அடிப்படையில் ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இதற்காக 10 ஆண்டு காலத்திற்கான செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தலை, திறந்த நிலை ஏல நடைமுறை மூலம் தெரிவு செய்து 10 ஆண்டு காலத்திற்கு இந்த முனையத்தை தனியார் துறைக்கு வழங்க உள்ளது. இது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கத்தக்கதாகும்.
உரிமத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.105.03 என ஆணையத்திற்கு ஐஆர்சி நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இது அதிகபட்ச ஏலத்தொகையாக உள்ளது. இந்த நடைமுறை மூலம் உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் வழியாக சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த செலவிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் சரக்குகளை வேகமாக கொண்டு செல்வதற்கான மாற்று முறையாகவும் இருக்கும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும். https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180221
***
SS/SMB/AS/SH
(Release ID: 2180480)
Visitor Counter : 10