விவசாயத்துறை அமைச்சகம்
பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம், பிரதமரின் தன்-தானிய விவசாய திட்டம் ஆகியவற்றை உரிய நேரத்தில் அமலாக்க மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்
Posted On:
17 OCT 2025 11:12AM by PIB Chennai
பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம், பிரதமரின் தன்-தானிய விவசாய திட்டம் ஆகியவை குறித்து தமது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உயர்நிலை கூட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நடத்தினார். இந்தத் திட்டங்களை குறிப்பிட்ட கால வரம்புக்குள் அமல்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். பிரதமரின் தன்-தானிய விவசாய திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய 11 அமைச்சகங்களை சேர்ந்த அமைச்சர்களின் கூட்டத்தை திரு சௌகான் விரைவில் கூட்டவிருக்கிறார்.
பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கத்தை வெற்றிகரமாகவும், உரிய நேரத்திலும் அமலாக்குவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களின் கூட்டத்தை நடத்துமாறு இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் பிரதமரின் தன்-தானிய விவசாய திட்டத்தை அடித்தள நிலையில் தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பிரதமரின் தன்-தானிய விவசாயத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 2025 ஜூலை 16 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் ஆண்டுக்கு ரூ.24,000 கோடி ஒதுக்கீட்டுடன் நிதி ஆண்டு 2025-26 முதல் 6 ஆண்டு காலத்திற்கு அமலாக்கப்படும். இதேபோல் பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கமும் ஆண்டுக்கு ரூ.11,440 கோடி ஒதுக்கீட்டுடன் 6 ஆண்டு காலத்திற்கு அமலாக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்; https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180212
***
SS/SMB/AS/KR
(Release ID: 2180319)
Visitor Counter : 12