குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்
प्रविष्टि तिथि:
16 OCT 2025 5:12PM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, இணையமைச்சர் டாக்டர். சுகந்தா மஜும்தார் ஆகியோர், குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். இரண்டு அமைச்சகங்களின் செயல்பாடுகள், முக்கிய முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடியரசுத் துணைத்தலைவரிடம் அமைச்சர்கள் விளக்கமளித்தார்கள்.
நாடு முழுவதும் விரிவடைந்து வரும் தொலைத்தொடர்பு மற்றும் இணைய உள்கட்டமைப்பு மற்றும் கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதற்கும், மலிவு விலையில் தரவு சேவைகளை வழங்குவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உத்வேகம் அளிப்பது குறித்து திரு ராதாகிருஷ்ணனுக்கு விளக்கப்பட்டது.
பரந்த அஞ்சல் வலையமைப்பு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உள்ளிட்ட புதுமையான திட்டங்கள் மூலம் அதன் விரிவான அணுகலைப் பயன்படுத்தும் அமைச்சகத்தின் முயற்சிகள் குறித்தும் குடியரசுத் துணைத்தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அஞ்சல் துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளான பிஎஸ்என்எல்-ன் மறுமலர்ச்சியை திரு ராதாகிருஷ்ணன் பாராட்டினார், மேலும் விரைவு தபால் அமைப்பு முறையின் திறமையான செயல்பாட்டைப் பாராட்டினார்.
பட்ஜெட் ஒதுக்கீடுகளை அதிகரித்தல், ரயில் மற்றும் சாலை இணைப்பை விரிவுபடுத்துதல், புதிய விமான நிலையங்களை உருவாக்குதல், சுற்றுலாவை ஊக்குவித்தல், வடகிழக்கு முதலீட்டு உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்தல், தனியார் முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் பிராந்தியத்தின் நீர்மின்சார ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்தும் குடியரசுத் துணைத்தலைவருக்கு விளக்கப்பட்டது. வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி, புதிய வாய்ப்புகளின் உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றம் குறித்து திரு ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179937
(Release ID: 2179937)
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2180174)
आगंतुक पटल : 33