பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

प्रविष्टि तिथि: 16 OCT 2025 5:11PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் இன்று சுமார் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஹோபிலம் நரசிம்ம சுவாமிக்கும், மகாநந்தி ஸ்ரீ மகாநந்தீஸ்வர சுவாமிக்கும் மரியாதை செலுத்தினார். அனைவரின் நல்வாழ்விற்காக மந்திராலயத்தின் குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடமிருந்தும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.

“சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஸ்ரீசைல மல்லிகார்ஜுனம்” என்ற த்வாதஷ ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்திலிருந்து ஒரு வசனத்தை ஓதி, பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில், சோமநாதர் மற்றும் மல்லிகார்ஜுனரின் பெயர்கள் தொடக்கத்தில் ஒன்றாகத் தோன்றுவதை பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார். குஜராத்தில் உள்ள சோமநாதரின் புனித பூமியில் பிறந்து, காசியில் உள்ள பாபா விஸ்வநாதரின் பூமிக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றதற்கும் ஸ்ரீ சைலத்தில் ஆசி பெற்றதும் தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறினார்.

ஆந்திரப் பிரதேசம் பெருமை மற்றும் வளமான கலாச்சாரத்தின் பூமி, அதே போல் அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் மையமாகவும் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மாநிலத்தின் எண்ணற்ற ஆற்றலையும் அதன் இளைஞர்களின் எல்லையற்ற திறன்களையும் எடுத்துரைத்தார்.  ஆந்திரப் பிரதேசத்திற்குத் தேவையானது சரியான தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவம் என்று அவர் குறிப்பிட்டார். இன்று, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் போன்ற தலைவர்களுடன், ஆந்திரப் பிரதேசம் மத்திய அரசின் முழு ஆதரவுடன் தொலைநோக்கு தலைமையைக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

கடந்த பதினாறு மாதங்களில், ஆந்திரப் பிரதேசம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் முன்னெப்போதும் இல்லாத வகையில்  முன்னேற்றத்துடன், தில்லியும் அமராவதியும் துரித வளர்ச்சியை நோக்கி இணைந்து செயல்படுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா நிச்சயமாக வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்றும், 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கும் அதன் 140 கோடி குடிமக்களுக்கும் சொந்தமானது என்றும் திரு மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். சாலைகள், மின்சாரம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவதாக அவர் அறிவித்தார். இந்த முயற்சிகள் மாநிலம் முழுவதும் இணைப்பை வலுப்படுத்தும், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் கர்னூல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும் மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எரிசக்தி பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், மின்சாரத் துறையில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒரு மின்மாற்றத் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இது நாட்டின் எரிசக்தி திறனை மேலும் அதிகரிக்கும் என்றும் விரைவான வளர்ச்சியின் மத்தியில் குடிமக்கள் கடந்த கால நிலைமைகளை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179934  

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2180129) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam