ஆயுஷ்
ஆயுர்வேத உணவை உலகளாவிய ஊட்டச்சத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதை நாம் நோக்கமாகக் கொள்வோம்: மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
Posted On:
16 OCT 2025 1:24PM by PIB Chennai
உலக உணவு தினம் 2025 கொண்டாடப்படும் தருணத்தில் சரிவிகித, நலன் சார்ந்த, இயற்கையான இந்தியாவின் தனித்துவமிக்க உணவு முறையான ஆயுர்வேத உணவு போன்ற முன்முயற்சிகள் மூலம் ஆரோக்கியமான, மேலும் நீடித்த பூமியை உருவாக்குவதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது.
இதன் முக்கிய நடவடிக்கையாக ஆயுஷ் அமைச்சகத்துடனான ஆலோசனைக்கு பிறகு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், பிரிவு “ஏ”-வின் கீழ் ஆயுர்வேத உணவுப் பொருட்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், நடப்பாண்டு உலக உணவு தின கருப்பொருள் இந்தியாவின் பாரம்பரிய ஞானத்துடன் வலுவாக எதிரொலிக்கிறது என்று கூறினார். ஆயுர்வேத உணவு வெறும் உணவு மட்டுமின்றி ஆரோக்கியம், நீடித்தத்தன்மை மற்றும் இயற்கை மீதான அக்கறை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு தத்துவமாகும் என்று குறிப்பிட்டார். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உடனான நமது ஒத்துழைப்பு மூலம், ஆயுர்வேத உணவை உலகளாவிய ஊட்டச்சத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதையும், சிறந்த உணவுகள் நோயற்ற எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179805
***
SS/IR/KPG/SH
(Release ID: 2180076)
Visitor Counter : 9