PIB Headquarters
azadi ka amrit mahotsav

நுகர்வோர் பாதுகாப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது

Posted On: 16 OCT 2025 12:47PM by PIB Chennai

நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களது குறைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வசதியாக தேசிய நுகர்வோர் உதவி எண் என்ற முன்முயற்சியை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மேற்கொண்டுள்ளது. இது ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு நடவடிக்கைகளுக்காக www.consumerhelpline.gov.in என்ற இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் நுகர்வோர் அரசு முகமைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், குறைதீர்ப்பாளர்கள், பெரு நிறுவனங்கள், அழைப்பு மையங்கள் என அனைத்து பிரிவையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதுடன் நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு முந்தைய நிலையில் தீர்வு காண்பதற்கு வழிவகுக்கிறது. இந்த நடைமுறைகள் திருப்தி அளிக்காத நிலையில் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் ஆணையத்தை அணுகி முறையிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நுகர்வோரின் உரிமைகள் குறித்து அறிந்து கொண்டு அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படும்வகையில் பல்வேறு தகவல்களை அளிக்கும் தளமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மூலம் நுகர்வோர் உதவி தொலைபேசி எண்ணின் செயல்பாடுகள் அனைவரையும் சென்றடையும் வகையில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் வரும் அழைப்புகளின் எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டில் 12,553-லிருந்து 2024-ம் ஆண்டில் 1,55,138 என்ற அளவில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179780   

***

SS/SV/AG/KR


(Release ID: 2179993) Visitor Counter : 31