உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள்’ தொடர்பான மாநாட்டை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 15 OCT 2025 5:58PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, 'தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள்' என்ற மாநாட்டை புதுதில்லியில், 2025 அக்டோபர் 16 (வியாழக்கிழமை) அன்று தொடங்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டின் போது, பல்வேறு மத்திய மற்றும் மாநில காவல் துறைகளைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று, வேறு நாடுகளுக்குத் தப்பியோடியவர்களைக் கண்காணிப்பதற்கும், இந்தியாவில் குற்றவியல் நீதியை எதிர்கொள்ள அவர்களை மீண்டும் அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் சர்வதேச காவல் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பார்கள். இந்த மாநாட்டில் வெளியுறவு, உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்கள், சம்பந்தப்பட்ட துறைகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

வெளிநாடுகளிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவதற்குக் கிடைக்கும் முறையான மற்றும் முறைசாரா வழிகளை திறம்படப் பயன்படுத்துதல், தப்பியோடிய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தேடப்படும் குற்றவாளிகளை நாட்டிடம் ஒப்படைப்பதற்கான  உத்திசார் அணுகுமுறை மற்றும் தேடப்படும் குற்றவாளிகளின் நிதி தடயங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். போதைப்பொருட்கள், பயங்கரவாதம், சைபர் குற்றம், திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் பொருளாதார குற்றவாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179525

(Release ID: 2179525)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2179695) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam