பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் துறையில் சைபர் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த கருத்தரங்கம்: இந்திய கடற்படை ஏற்பாடு
Posted On:
15 OCT 2025 12:56PM by PIB Chennai
கடல்சார் துறையில் சைபர் தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீதான அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கை இந்தியக் கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கு புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் மாளிகையில், நாளை (16.10.2025) நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் கடல்சார் துறையில் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வகையிலும் நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கருத்தரங்கில் தொடக்க அமர்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ளும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா உரையாற்றுகிறார்.
இதில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், தேசிய பாதுகாப்புக் குழு செயலகம், இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் (கெயில்) ஹைட்ரோ கார்பன் தலைமை இயக்குநரகம், இந்திய அவசரகால கணினி மீட்புக் குழு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம், தேசிய கடல்சார் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் துறைசார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179284
***
SS/SV/KPG/SH
(Release ID: 2179588)
Visitor Counter : 7