ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இந்தியா- சவுதி அரேபியா இடையே ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என முடிவு
Posted On:
15 OCT 2025 9:23AM by PIB Chennai
மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறை, சவுதி அரேபியாவின் தொழில்துறை மற்றும் கனிம வளங்கள் அமைச்சகம் இடையே இருதரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்திய தரப்பில் ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத்துறை செயலாளர் நிவேதிதா சுக்லா வர்மா தலைமை தாங்கினார். சவுதி அரேபிய குழுவுக்கு அந்நாட்டு தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை துணை அமைச்சர் திரு கலில் பின் இப்ராஹிம் பின் சலமாஹ் தலைமை வகித்தார்.
இந்தியாவின் 4-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதி அரேபியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 41.88 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இதில் ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையின் பங்களிப்பு 10 சதவீதமாகும். அதாவது சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.
ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையின் ஒத்துழைப்பில் புதிய வழிவகைகளை கண்டறிதல், முதலீடுகளை ஊக்குவித்தல், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இருநாடுகளின் ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையில் உள்ள பங்களிப்பை மேம்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. பெட்ரோ ரசாயனத்துறை சவுதி அரேபியாவின் வலிமையாகவும், சிறப்பு ரசாயனத்துறையில் இந்தியா வலிமையாகவும் உள்ளன. இணைந்து செயல்படுவதற்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் பெட்ரோ ரசாயன முதலீட்டு பிராந்தியங்கள் மற்றும் பெட்ரோலியம், ரசாயனத்துறைகளில் முதலீடுகள் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்கள் மதிப்பு சங்கிலியில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்காக வாய்ப்புகள் குறித்து இருதரப்பும் விவாதித்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் இத்துறையில் திறன்மேம்பாடு ஆகியவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179199
***
SS/IR/AG/SH
(Release ID: 2179569)
Visitor Counter : 10