தேர்தல் ஆணையம்
பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமலாக்க முகமைகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Posted On:
15 OCT 2025 10:07AM by PIB Chennai
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இம்மாதம் 6-ம் தேதி வெளியிட்டிருந்தது.
தேர்தலையொட்டி போதைப் பொருள்கள் பயன்பாடு, இலவசங்கள் மற்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில், மாநில காவல் துறை, கலால் வரித்துறை, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, வருவாய் புலனாய்வுத் துறையினர் சுங்க வரித்துறையினர், அமலாக்கத் துறையினர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் காவல்படை உள்ளிட்ட அனைத்து அமலாக்க முகமைகளும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்கென செலவின பார்வையாளர்கள் குழு ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான தினத்தன்று இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்றடைந்தனர். இவ்வாறு பணியமர்த்தப்பட்ட அனைத்துக் கண்காணிப்புக்குழுவினரும், செலவினங்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்க உள்ளனர்.
பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் என கண்காணிப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது உள்பட சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
தேர்தல் பறிமுதல், மேலாண்மை நடவடிக்கைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்துவதற்கான நடைமுறையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் காலத்தில் அமலாக்க முகமை அதிகாரிகளால் பறிமுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 6-ம் தேதி முதல் இதுவரை 33.97 கோடி ரூபாய் ரொக்கப்பணம், மதுபானங்கள், போதைப் பொருள்கள், இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பல்வேறு அமலாக்க முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179201
***
SS/SV/KPG/SH
(Release ID: 2179568)
Visitor Counter : 6