சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாடு

प्रविष्टि तिथि: 14 OCT 2025 12:50PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள்  பங்கேற்கும் இரண்டு நாள் மாநில சுற்றுலா அமைச்சர்கள் மாநாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 2025 அக்டோபர் 14-15 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் குறைந்தது ஒரு உலகாளவிய தரம் வாய்ந்த சுற்றுலாத் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் “ஒரு மாநிலம்: ஒரு உலகளாவிய சுற்றுலா தளம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் இதுவாகும். இந்தியாவில் சுற்றுலா மாற்றத்திற்கான திட்டமிடல் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வழிவகைகளின் ஒரு பகுதியாக சுற்றுலா மைய மேம்பாடு மற்றும் சுற்றுலா மைய மேலாண்மைக்கான மத்திய பட்ஜெட் 2025-26-ல் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகளை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது.

சுற்றுலாத்துறை செயலாளர் வி.வித்யாவதி, தொடக்க உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த இரண்டு நாள் விவாதம் குறித்து விவரித்தார்.

இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுலா மையங்கள் மற்றும் அதற்கான பட்ஜெட் முன்முயற்சிகள்  ஆகியவற்றை  சுற்றுலாத்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் சமர்ப்பிக்க உள்ளனர்.

உலகளாவிய சுற்றுலா மையமாக வளர்ச்சியடையச் செய்வதற்கான  சாத்தியக்கூறுகள் உள்ள சுற்றுலா மையம் குறித்து ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் விளக்க உள்ளது. இரண்டாம் நாள் அன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் ஒட்டுமொத்த சுற்றுலா மையமாக இந்தியாவை திகழச் செய்யும் வகையில், வரைவு ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டு  திட்ட வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178797  

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2179072) आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu