பாதுகாப்பு அமைச்சகம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது
Posted On:
12 OCT 2025 1:48PM by PIB Chennai
2025 அக்டோபர் 13 முதல் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஆஸ்ட்ராஹிந்த் என்ற பயிற்சியில் பங்கேற்க 120 பேரைக் கொண்ட இந்திய ராணுவக் குழு நேற்று (11.10.2025) ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள இர்வின் பாராக்ஸுக்குப் புறப்பட்டது.
நான்காவது ஆண்டாக இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்திய ராணுவப் படைப் பிரிவுல் கூர்க்கா ரைபிள்ஸ் பட்டாலியன், பிற ஆயுதப் படையினர் உள்ளனர்.
வருடாந்திர ஆஸ்ட்ராஹிந்த் (AUSTRAHIND) பயிற்சி, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல், செயல்தன்மையை மேம்படுத்துதல், போர்க்களங்களில் உத்திசார் செயல்பாடுகள், மேம்பட்ட நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு இரு நாட்டுப் படையினருக்கும் இடையே நட்புறவை வளர்க்கும்.
*****
(Release ID: 2178040)
AD/PLM/SG
(Release ID: 2178075)
Visitor Counter : 24