PIB Headquarters
azadi ka amrit mahotsav

பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இந்தியா இயக்கம்

Posted On: 11 OCT 2025 6:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 அக்டோபர் 11 அன்று 11,440 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருப்பு வகைகளின் தற்சார்புக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். இது 202526-ம் ஆண்டு முதல் 203031-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

 

2030–31-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பருப்பு உற்பத்தியை 350 லட்சம் டன்களாக உயர்த்துவதையும், சாகுபடி பரப்பளவை 310 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றை 100 சதவீதம் கொள்முதல் செய்வதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 88 லட்சம் இலவச விதைப் பெட்டிகளும், 126 லட்சம் குவிண்டால் சான்றளிக்கப்பட்ட விதைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

 

உத்தரவாதமான கொள்முதல், தரமான விதை விநியோகம், மேம்படுத்தப்பட்ட மதிப்புச் சங்கிலி ஆதரவு ஆகியவற்றிலிருந்து கிட்டத்தட்ட 2 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பருப்பு வகைகள் வெறும் விவசாயப் பண்டம் அல்ல; அவை இந்தியாவின் ஊட்டச்சத்து பாதுகாப்பு, மண் ஆரோக்கியம், கிராமப்புற வாழ்வாதாரம் ஆகியவற்றின் முக்கிய அம்சம். பெரிய அளவில் பருப்பு உற்பத்தியாளர், நுகர்வு, இறக்குமதியாளர் என்ற வகையில், இந்தியாவின் கொள்கைகள் இந்தத் துறையில் உற்பத்தித்திறனையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. பருப்பு வகைகளுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது.

 

பொருளாதார, வர்த்தக முக்கியத்துவத்திற்கு அப்பால், பருப்பு வகைகள் ஒரு ஊட்டச்சத்து அம்சமாகவும் செயல்படுகின்றன. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் தகவல்படி, இவை இந்திய உணவுகளில் மொத்த புரத உட்கொள்ளலில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீதம் பங்களிக்கின்றன. இருப்பினும், பருப்பு வகைகளின் தனிநபர் நுகர்வு ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவான 85 கிராமை விடக் குறைவாகவே உள்ளது. இது நாடு முழுவதும் புரத ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழி வகுக்கிறது. எனவே, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது ஒரு பொருளாதாரத் தேவை மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

 

இந்த இரட்டை முக்கியத்துவத்தை உணர்ந்து, மத்திய அரசு பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க அதிசிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளது. 2025 அக்டோபர் 11, 2025 அன்று புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 11,440 கோடி செலவில் பருப்பு வகைகளில் தற்சார்பு அடையும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்வின் போது, பருப்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் உரையாடினார்.

 

 

பல ஆண்டுகளாக, இந்தியா பருப்பு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் இதன் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 2013-14-ம் ஆண்டில் 192.6 லட்சம் டன்னாக இருந்த பருப்பு வகைகள் உற்பத்தி, 2024-25-ம் ஆண்டில் 252.38 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 31 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது . இந்த முன்னேற்றம் பாராட்டத்தக்கது என்றாலும், உற்பத்தியை மேலும் மேம்படுத்தவும், நாட்டின் அதிகரித்து வரும் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கணிசமான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2023-24-ம் ஆண்டில், இந்தியா 47.38 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. 5.94 லட்சம் டன்களை ஏற்றுமதி செய்திருந்தாலும் இதில் மேலும் அதிக கவனம் தேவை. உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மட்டும், தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை.  202324-ம் ஆண்டில் பருப்பு வகைகள் இறக்குமதி 47.38 லட்சம் டன்களை எட்டியுள்ள நிலையில், பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைவதை ஒரு முக்கிய தேசிய நோக்கமாக அரசு முன்னுரிமைப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில் பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம் இந்தியாவிற்கு ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் பொருளாதார பாதுகாப்பையும் வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

 

https://youtu.be/Yd4yFhWVSOo?si=WHt9Sfq24LjucNCF

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173547

 

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2039209

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085530

 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/feb/doc202221616601.pdf

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1993155

 

https://niti.gov.in/sites/default/files/2025-09/Strategies-and-Pathways-for-Accelerating-Growth-in-Pulses-towards-the-Goal-of-Atmanirbharta.pdf

 

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

 

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU4231_bGGta7.pdf?source=pqals

 

https://seedtrace.gov.in/ms014/aboutUs

 

***

(Release ID: 2177847)

AD/PLM/RJ


(Release ID: 2177932) Visitor Counter : 8