மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி தொடர்பான கட்டணங்களைச் செலுத்த பள்ளிகளில் யுபிஐ பயன்பாட்டைக் கல்வி அமைச்சகம் ஊக்குவிக்கிறது
प्रविष्टि तिथि:
11 OCT 2025 4:15PM by PIB Chennai
வாழ்க்கை வசதிகளையும் பள்ளிக் கல்வியையும் எளிதாக்க மத்திய அரசு பல்வேறு நிலைகளில் பரந்த அளவிலான முயற்சிகளை எடுத்துள்ளது.
அந்த வகையில் ஒரு முயற்சியாக, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி - எழுத்தறிவுத் துறையானது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், நிர்வாக செயல்முறைகளை, குறிப்பாக பள்ளிகளில் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பானவற்றை நவீனமயமாக்குவதன் மூலம் பள்ளிக் கல்வியை எளிதாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளகளில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ-யை (UPI) பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் ஆகியவையும், கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ போன்ற தன்னாட்சி அமைப்புகளும், பாதுகாப்பான, வெளிப்படையான டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பள்ளி சேர்க்கை, தேர்வுக் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்க உதவும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துமாறு மத்திய கல்வித் துறை ஊக்குவித்துள்ளது.
ரொக்க அடிப்படையிலான கட்டணத்திலிருந்து டிஜிட்டல் கட்டணங்களுக்கு மாறுவது பல நன்மைகளை வழங்குகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும், இது வசதியையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2177798)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2177917)
आगंतुक पटल : 34