PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியா-இஎஃப்டிஏ வர்த்தக ஒப்பந்தம்: 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்து 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

Posted On: 11 OCT 2025 12:20PM by PIB Chennai

முக்கிய குறிப்புகள்

இந்தியாவும், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கமான இஎஃப்டிஏ-வும் (EFTA), 2024 மார்ச் 10 அன்று வர்த்தக - பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமான டிஇபிஏ-வில் (TEPA) கையெழுத்திட்டன. இது 2025 அக்டோபர் 1. அன்று நடைமுறைக்கு வந்தது , இது நான்கு வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும்.

* டிஇபிஏ, 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்து 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

* இதில் உள்ள நடைமுறைகள், இது பால், சோயா, நிலக்கரி, விவசாயம் போன்ற முக்கிய துறைகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் .

* இந்த ஒப்பந்தம் சந்தை அணுகலை விரிவுபடுத்தி, உற்பத்தியையும் புதுமைகளையும் அதிகரிக்கும்.

இஎஃப்டிஏ என்பது ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது 1960-ம் ஆண்டு அதன் உறுப்பினர்களிடையே தடையற்ற வர்த்தக பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

2024 மார்ச் 10 அன்று புது தில்லியில் கையெழுத்தான இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம் (EFTA) வர்த்தக - பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (TEPA), 2025 அக்டோபர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் ஒரு முக்கியமான தருணமாகும்.

இது நான்கு வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும் , மேலும், அளவிலும் நோக்கத்திலும் மிகப்பெரிய ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தம் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பொருட்களுக்கான சந்தை அணுகல், வர்த்தக வசதி, வர்த்தக தீர்வுகள்முதலீட்டு மேம்பாடு, சேவைகள், அறிவுசார் சொத்துரிமைகள் முக்கிய பகுதிகளை அவை மையமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்குக் கீழ்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.commerce.gov.in/international-trade/trade-agreements/india-efta-tepa/

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2013169

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154945&ModuleId=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173138

***

(Release ID: 2177724)

AD/PLM/RJ


(Release ID: 2177836) Visitor Counter : 9