ஜவுளித்துறை அமைச்சகம்
ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி துறைகளை ஊக்குவிக்க பிஎல்ஐ திட்டத்தில் திருத்தங்கள் அறிவிப்பு
Posted On:
09 OCT 2025 4:10PM by PIB Chennai
எம்எம்எப் ஆடைகள், எம்எம்எப் துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் முக்கிய திருத்தங்களை ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க திருத்தங்கள் தொழில்துறை சவால்களை எதிர்கொள்ளவும், எளிதாக வணிகத்தை மேம்படுத்தவும், துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கவும், வளர்ச்சியை விரைவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வேலைவாய்ப்பை வளர்ப்பதில் அரசாங்கத்தின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், உலக ஜவுளி சந்தையில் இந்தியாவின் தலைமையை வழிநடத்துகிறது. இத்திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பிஎல்ஐ திட்டத்தின் முக்கிய திருத்தங்கள்:
• தகுதியான தயாரிப்புகளின் விரிவாக்கம்: எம்எம்எப் ஆடைகளுக்கு 8 புதிய எச்எஸ்என் குறியீடுகள் மற்றும் எம்எம்எப் துணிகளுக்கு 9 புதிய எச்எஸ்என் குறியீடுகள்.
• புதிய நிறுவனங்களை அமைப்பதில் இருந்து தளர்வு: விண்ணப்பதாரர்கள் தற்போது இருக்கும் நிறுவனங்களிலேயே திட்டப் பிரிவுகளை நிறுவலாம்.
• முதலீட்டின் குறைந்தபட்ச வரம்பு குறைப்பு: 01.08.2025 முதல், அனைத்து புதிய விண்ணப்பதாரர்களுக்கும், குறைந்தபட்ச முதலீடு, திட்டத்தின் பகுதி-1 பிரிவில் ரூ.300 கோடியிலிருந்து ரூ.150 கோடியாகவும், திட்டத்தின் பகுதி-2 பிரிவில் ரூ.100 கோடியிலிருந்து ரூ.50 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
• ஊக்கத்தொகைக்கான அதிகரிக்கும் விற்றுமுதல் அளவுகோல், முன்பு இருந்த 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைப்பு: 2025-26 நிதியாண்டு முதல், விண்ணப்பதாரர்கள் ஊக்கத்தொகைகளுக்குத் தகுதிபெற (ஆண்டு 2 முதல்) முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்தபட்சம் 10% அதிகரித்த வருவாயை நிரூபிக்க வேண்டும்.
மேலே உள்ள திருத்தங்கள், நுழைவுத் தடைகள் மற்றும் நிதி வரம்புகளைக் கணிசமாகக் குறைத்து, விரைவான செயலாக்கத்துக்கு உதவும்.
விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு:
தொழில்துறையின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்க, ஜவுளி அமைச்சகம் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வலைதளத்தை திறந்துள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் திருத்தப்பட்ட கட்டமைப்பையும் நீட்டிக்கப்பட்ட காலக் கெடுவையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
***
(Release ID: 2176795)
SS/VK /KR
(Release ID: 2177183)
Visitor Counter : 18