தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய மொபைல் மாநாடு மற்றும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் வெற்றி தற்சார்பு இந்தியாவிற்கு வலு சேர்க்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
08 OCT 2025 3:08PM by PIB Chennai
ஆசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியான இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்து உரையாற்றினார். குவாண்டம் தகவல் தொடர்பு, 6ஜி, மொபைல் சேவை மற்றும் நிதிசார் மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு துறைகளில் புத்தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது என்று கூறினார். தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் மூலம் இத்துறையின் முக்கியமான திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 2014 -ம் ஆண்டுக்கு பிறகு மின்னணு சாதன உற்பத்தி 6 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் மொபைல் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தற்சார்பு இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையின் வலிமையைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் தெரிவித்தார்.
தொலைத்தொடர்புச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், அத்துறையின் விரைவான வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவிடும் என்று அவர் கூறினார். சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், சைபர் மோசடிகளுக்கு எதிரான வலிமையான சட்டங்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறைகள், தொழில்துறை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாட்டின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்திய மொபைல் மாநாடு உதவிடும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்திய சிந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாகத் தெரிவித்தார். வரும் 2035-ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6ஜி அலைக்கற்றை சேவைகள் 1.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு பங்களிக்கும் என்று எதிர்பாரக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். உலக அளவில் 6ஜி அலைக்கற்றை சேவைக்கான காப்புரிமையில் பத்து சதவீதத்தை இந்தியா பெறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176270
****
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2176582)
आगंतुक पटल : 37