பாதுகாப்பு அமைச்சகம்
எதிர்கால போர்முறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை புதுமை கண்டுபிடிப்பாளர்கள் வடிவமைக்க வேண்டும் – மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
07 OCT 2025 2:02PM by PIB Chennai
தற்போதைய போர்க்களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கால போர் முறைகள் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகள் மூலம் நடத்தப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லி விஞ்ஞான்பவனில் 2025 அக்டோபர் 7 அன்று தேசிய மாநாட்டின் தொடக்கத்திற்கு முன்னதாக ஐடெக்ஸ் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் இது போன்ற செயல்முறையை நாம் மேற்கொண்டோம் என்று குறிப்பிட்டார். ட்ரோன் எதிர்ப்பு முறைகள், குவாண்டம் கணினி இயக்கப்படும் எரிசக்தி ஆயுதங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார். தற்போதைய தீர்வுகளுக்கு அப்பால் சிந்திக்குமாறும் போர்முறையை மறுவரையறை செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்குமாறும் புதுமை கண்டுபிடிப்பாளர்களை அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தில், நாம் பின்பற்றுவோராக இல்லாமல் உலகிற்கான படைப்பாளர்களாகவும் தரநிலையை தீர்மானிப்பவராகவும் அவசியம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மயமாக்கலின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், உள்நாட்டு வளங்களிலிருந்து பாதுகாப்புத் தளவாட மூலதனக் கொள்முதல் 2021-22-ம் ஆண்டில் ரூ.74,000 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ம் ஆண்டில் ரூ.1.2 லட்சம் கோடியாக அதிகரித்தது என்று கூறினார்.
அரசின் பொதுக் கொள்முதல் கொள்கையின் கீழ், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்படும் கொள்முதலில் குறைந்தது 25 சதவீதம் சிறு, குறு தொழில் துறை நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 350-க்கும் அதிகமான உபகரணங்கள் இதற்காக பிரத்யேகமாக இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு ஒரு முழக்கமாக இருந்து தற்போது இயக்கமாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175724
***
SS/IR/KPG/SH
(Release ID: 2175981)
Visitor Counter : 7