மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான சூழல் அமைப்பை கட்டமைப்பதற்கான திட்ட முன்மொழிவில் ஐஐடி சென்னையின் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
Posted On:
07 OCT 2025 1:06PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாதவகையில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக உள்ளது. எனவே இதன் பாதுகாப்பு, வெளிப்படை தன்மை, பயன்படுத்துவதற்கான நம்பிக்கை ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டியது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக கருதப்படுகிறது. இது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்புக்கான கருவிகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள், சமூக - தொழில்நுட்பம் இடையே தனித்துவ உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் குறித்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 400-க்கும் அதிகமான திட்டமுன்மொழிவுகள் பல்வேறு நன்மதிப்பு கொண்ட கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இந்த முன் மொழிவுகள் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றில் 5 முக்கிய முன் மொழிவுகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைத்து பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற பெயரில் சோதனைகள், பாகுபாடு இல்லாத தணிக்கை நடைமுறைகளுடன் அதனை மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் பட்டியலில் சென்னையில் உள்ள ஐஐடி சென்னை கல்வி நிறுவனத்தின் திட்டமும் அடங்கும். இந்த நிறுவனம் அளித்துள்ள திட்ட முன் மொழிவு ஆர்ஏஜி அடிப்படையிலான மேம்பட்ட கட்டமைப்புடன் கூடிய டீப்ஃபேக் எனப்படும் தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கும், அதனை நிர்வகிப்பதற்குமான திட்டமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175698
***
SS/SV/AG/SH
(Release ID: 2175977)
Visitor Counter : 27