ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மைப்பணிகள் மற்றும் நிலுவைப்பணிகளை களைவதற்கான சிறப்பு இயக்கம் 5.0-ல் மத்திய நீர்வளத்துறை பங்கேற்பு
प्रविष्टि तिथि:
06 OCT 2025 11:22AM by PIB Chennai
அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளவும், நிலுவைப் பணிகளை களையவும் 2025 அக்டோபர் 02 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 5.0 நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் 2025 செப்டம்பர் 15 முதல் 30 வரையிலும், இப்பணிகளை அமல்படுத்துவது 2025 அக்டோபர் 02 முதல் 31 வரையிலும் என இரண்டு கட்டங்களாக இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் திரு வி எல் காந்தாராவ் தலைமையில் 2025 செப்டம்பர் 12 அன்று கூட்டம் நடைபெற்றது. அப்போது நீர்வளத்துறையின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் சிறப்பு இயக்கம் 5.0 குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் இலக்குகளை அடைவதை உறுதிசெய்யும் வகையில் உத்வேகத்துடன் பங்கேற்குமாறு அனைத்து பிரிவுகள் மற்றும் அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175211
***
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2175323)
आगंतुक पटल : 42