பிரதமர் அலுவலகம்
காசாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமைத்துவ முன்னெடுப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு
प्रविष्टि तिथि:
04 OCT 2025 7:58AM by PIB Chennai
காசாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவ முன்முயற்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான அறிகுறிகள், தற்போது நடைபெற்று வரும் மனிதாபிமான மற்றும் இராஜதந்திர முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கு பங்களிக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் இந்தியா தனது அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதாவது:
“காசாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அதிபர் டிரம்பின் தலைமைத்துவ முன்முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
நீடித்த அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்.
@realDonaldTrump
@POTUS”
******
(Release ID: 2174689)
AD/EA/SG
(रिलीज़ आईडी: 2174742)
आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam