பிரதமர் அலுவலகம்
திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2025 7:42AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது நீடித்த நேர்மை, பணிவு மற்றும் உறுதியான தலைமைத்துவத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
வரலாற்றின் முக்கிய தருணங்களின் போது, இந்தியாவில் தேசிய பண்புகளை வடிவமைப்பதில் திரு சாஸ்திரியின் முக்கிய பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டின் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஆற்றல் சக்தியாக அவரது புகழ்பெற்ற ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ முழக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.
வலிமையான மற்றும் தன்னிறைவான தேசத்தை உருவாக்கும் கூட்டு முயற்சியில் திரு லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியர்களை ஊக்குவிக்கும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“தலைசிறந்த அரசியல் மேதையான திரு லால் பகதூர் சாஸ்திரியின் நேர்மை, பணிவு மற்றும் உறுதி, சவாலான காலகட்டங்களில் கூட இந்தியாவை வலிமைப்படுத்தின. அவர் முன்மாதிரியான தலைமைத்துவம், வலிமை மற்றும் உறுதியான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற அவரது முழக்கம், நம் நாட்டு மக்களிடையே தேசப்பற்று உணர்வைத் தூண்டியது. வலிமையான மற்றும் தன்னிறைவான இந்தியாவைக் கட்டமைப்பதில் அவர் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறார்.”
(Release ID: 2173982)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2174096)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam