மத்திய அமைச்சரவை
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2025 3:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணைத் தொகையை 01.07.2025 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 55% விகிதத்தை விட 3% அதிகமாகும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகிய இரண்டையும் அதிகரிப்பதால் மத்திய அரசிற்கு ஆண்டொன்றுக்கு 10,083.96 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது 49.19 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
(Release ID: 2173541)
******
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2173813)
வருகையாளர் எண்ணிக்கை : 352
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam