உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது
Posted On:
30 SEP 2025 2:15PM by PIB Chennai
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு குழுமத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐநா முகமையின் சிறப்பு அமைப்பான இதன் இரண்டாவது தொகுதியில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக்கான வழித்தடங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த கவுன்சிலின் தலைமை பொறுப்பிற்கான தேர்தல் இம்மாதம் 27-ம் தேதி மாண்ட்ரியால் நகரில் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா 2022-ம் ஆண்டைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் மீது உறுப்பு நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளது.
முன்னதாக, இம்மாதம் 2-ம் தேதியன்று புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பொதுக்கூட்டத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் நடத்தியது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு இந்த அமைப்பின் உறுப்புநாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை பிற உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து மேற்கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173064
***
SS/SV/SH
(Release ID: 2173266)
Visitor Counter : 6