குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வலுவான கொள்கைகள் மற்றும் அமலாக்கத்திற்கு துல்லிய புள்ளியியல் பகுப்பாய்வுகள் அவசியம்: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 29 SEP 2025 2:35PM by PIB Chennai

வலுவான கொள்கைகளை வகுப்பதற்கும் அவற்றின் அமலாக்கத்திற்கும் துல்லியமான புள்ளியியல் பகுப்பாய்வுகள் அவசியம் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் மாளிகையில் பயிற்சி முடித்த இந்திய புள்ளியியல் அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், இன்றைய உலகம் வலுவான தரவுகளை சார்ந்துள்ளது என்று கூறினார். அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வுகள் மற்றும் அவற்றின் தொகுப்புகளை உருவாக்குவதில் அத்துறை சார்ந்த அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். புள்ளியியல் முறைகளில் அவர்களது திறன் வாய்ந்த சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சி விகிதம் குறித்த தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு இதன் பயன்பாடு அவசியம் எ்னறு அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மற்றும் அறிவு உத்வேகம் அளிக்கும் இயக்கியாக உள்ளது என்று அவர் கூறினார். சர்வதேச சவால்களுக்கு  உரிய பதில் அளிக்க திறமையான பணியாளர்களை ஒவ்வொரு நாடும் உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். எனவே, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் இளைஞர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய கருவியாக பொறியாளர்களின் பணி அமைந்துள்ளது என்று அவர் கூறினார். மத்திய பொறியியல் சேவைக்கான அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இத்தகைய முன்முயற்சிகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த அடித்தளத்தை ஏற்படுத்துவதிலல் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் நாட்டின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் தமக்கு மகிழ்ச்சிஅளிப்பதாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172676  

***

SS/SV/KPG/RJ


(Release ID: 2172755) Visitor Counter : 12