வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புறக் கழிவு மேலாண்மை வழிகாட்டுதல் முயற்சியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
27 SEP 2025 1:45PM by PIB Chennai
துப்புரவுப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் நகரங்களை வழிகாட்டி நகரங்களாக அடையாளம் கண்டறிந்து, கழிவு மேலாண்மை முயற்சியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக சுமார் 72 வழிகாட்டுதல் நகரங்கள் அடையாளம் காணப்பட்டு, அதனுடன் 200 குறைந்த செயல்திறன் கொண்ட வழிகாட்டப்படும் நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை நகர இணை முன்முயற்சியை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இணையமைச்சர் திரு டோகன் சாஹு, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மேயர்கள், ஆணையர்கள், ஆகியோர் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். சோனிபட்டில் நடந்த ஒரு தேசிய நிகழ்வில் வழிகாட்டி மற்றும் வழிகாட்டுதல் நகரங்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நகர்ப்புற கழிவு மேலாண்மைத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படும். இது நகர்ப்புற இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையில் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு, சக கற்றல் மற்றும் சிறந்த நடைமுறைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சோனிபட்டில் நடந்த தூய்மை நகர இணை முன்முயற்சியின் தொடக்க நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்த இயக்கத்தின் மூலம் அனைத்து நகரங்களும் பயனடையும் என்றார்.
பங்கேற்ற நகரங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகத் தலைவர்கள் முன்னிலையில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரே நேரத்தில் கையெழுத்திடப்பட்டன. இது அறிவுப் பகிர்வு, வழிகாட்டுதல் மற்றும் கையகப்படுத்துதலுக்கான ஒரு மாறும் தளத்தை உருவாக்கும் 100 நாள் அவகாசத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172112
***
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2172271)
आगंतुक पटल : 33